”திமுகவின் நீட் தேர்வு எதிர்ப்பு தேர்தல் நாடகம்” - சீமான் விமர்சனம்!

திமுகவின் நீட் தேர்வு  விலக்கு கோரிக்கை தேர்தல் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

சமீபத்தில் உயிரிழந்த நாம் தமிழர் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ் தந்தையின் படத்தை திருவொற்றியூரில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். 

இதையும் படிக்க : ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு ஆளுநர் கண்டனம்...!

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சீமான், நீட் தேர்வு ஆபத்து என்று கூறும் திமுக கொண்டு வரும் போது என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பினார். திமுக நீட் தேர்வுக்கு  கையெழுத்து போட்டுவிட்டு தற்போது அதை எதிர்த்து கையெழுத்து வாங்கி என்ன செய்யப் போகிறது என்றும் வினவினார்.

தொடர்ந்து எ.வ வேலு வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் வரும் போது மட்டும் பாஜக ஆளாத மாநிலங்கள், ஆளுங்கட்சி ஆளும் மாநிலங்களில் எதிர்கட்சிகள் என அவர்கள் மீது அமலாக்கதுறை, லஞ்ச ஒழிப்பு துறையை வைத்து சோதனை செய்வதை என்ன சொல்வது என விமர்சித்து பேசினார்.