திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்த அண்ணாமலை குறித்து ஏற்கனவே திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி அளித்திருந்த பேட்டி ஒன்றில், இது தொடர்பாக அவர் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆர். எஸ். பாரதி சார்பில் அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
திமுகவினர் மீது தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதாக அண்ணாமலைக்கு திமுக சார்பில் திடீர் நோட்டிஸ் வழங்கப்பட்டிருக்கிறது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
அந்த நோட்டீஸில் அண்ணாமலை திமுகவினர் மீது ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளை சாட்டியுள்ளார் எனவும், அதற்காக அவர் தனது அந்த பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் , மேலும், அண்ணாமலையின் இந்த செயலுக்கு நஷ்ட ஈடாக 500 கோடி தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி - முன்னாள் அமைச்சர் பளீர்!!!
மேலும் அதில், "மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக கடந்த 2021 -ம் ஆண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து அவரது வழிகாட்டுதலின்படி சிறப்பாக இக்கட்சி வளர்ந்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியும், அதற்காக அயராது உழைத்து வருகிறார். தற்போதுள்ள திராவிட ஆட்சியில் சிறந்து விளங்கி நாட்டின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து, தமிழக தேர்தல் களத்தில் பாஜக முத்திரை பதிக்க முடியாத நிலையில் தற்போது திமுக-வில் முதல்வர் உட்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்களை களங்கப்படுத்தும் நோக்கில் பேசியிருப்பதாகவும் தொடர்ந்து அவதூறு செய்ய முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | அதிமுக - வை எவன் பேசினாலும் பதிலடி தருவோம் - : செல்லூர் ராஜு ஆவேசம்