ஒடிசா விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...!

ஒடிசா விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...!
Published on
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி நூற்றாண்டு விழா இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை திமுகவினா் தீவிரமாக செய்து வருகின்றனா். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கடந்த 3-ம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. மேலும் அந்த விழா ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருணாநிதி நூற்றாண்டு விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழாவை திமுக சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்விழாவையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 

மேலும் இன்று சென்னை புளியந்தோப்பில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசவுள்ளாா். இதேபோல் அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com