ஈரோட்டில் தஞ்சம் அடைந்த திமுக அமைச்சர்கள்.... தேர்தல் பயமா?!!

ஈரோட்டில் தஞ்சம் அடைந்த திமுக அமைச்சர்கள்....  தேர்தல் பயமா?!!

தோல்வி பயத்தின் காரணமாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஈரோட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பரப்புரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள கே எஸ் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  ஈரோட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள சாலைகளில் வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் சென்று தங்களின் வாக்கு சேகரிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திமுக அரசின் 20 மாத கால அராஜகங்களை மக்கள்  முன்வைத்தும் அதிமுக ஆட்சி காலத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு செய்து கொடுத்திருக்கக் கூடிய பணிகளை முன்வைத்தும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம் எனவும் தோல்வி பயத்தின் காரணமாக திமுகவைச் சார்ந்த ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:    கூட்டணி தர்மத்தை மதிக்காத அதிமுக.... தேர்தல் தோல்வி உறுதி!!