சிவகங்கை மாவட்டம் புரட்சி தலைவி 75வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக அரசின் மீதான் விமர்சனங்களை கேள்விகளாக அடுக்கி கூறினார் அவை பின்வருமாறு...
என்ன செய்தார் முதல்வர்?
சிவகங்கை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார் என்பதை மக்களிடம் தெரியப்படுத்த முடியுமா? ஸ்டாலின் செய்த சாதனை உதயநிதியை அமைச்சராக ஆக்கியதுதான் எனவும்
அரச பரம்பரையா ஸ்டாலின் அவருக்கு பின் அவரது மகன் என தொடர்கிறார்கள். அவர் கூறியதை நான் என்னுடைய பொது கூட்டத்தில் ஒளிபரப்பினாள் அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.பள்ளி போவதற்கு குழந்தைகளுக்கு பென்சில் பேனா என அனைத்தும் வழங்கியவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் செய்த சாதனைகள் மக்கள் மனதில் நிற்கிறது.
மேலும் படிக்க | இபிஎஸ் பொதுக்கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு முறையீடு
பேனாவை 82 கோடிக்கு செலவு செய்து வைக்கிறார்கள் எழுதாத பேணாவிற்கு இந்த சிலை தேவையா? உதய நிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கியுள்ளது, அரசியலிலும் சம்பாதிக்கிறார்கள், சினிமாவிலும் சம்பாதிக்கிறார்கள்.திமுக ஆட்சியில் ஸ்டாலின் தான் என்ன செய்தேன் என சொல்ல முடியுமா. அவருடைய சாதனை அவரது மகனை அமைச்சராக்கியதே
நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினோம் அந்த திட்டத்தையும் இந்த் அரசு கைவிட்டுள்ளது. அதிமுக அரசு, குடிமராமத்து திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது, 26 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது.முன்னாள் முதல் கருணாநிதிக்கு பேனா சின்னம் வைக்க 81 கோடி ஒதுக்கிய திமுக அரசு. எழுதாத பேனாவிற்கு எதற்கு 81 கோடி எனவும் கோபத்துடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்.