டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான டிடி திரைப்படம் வெளியாகி உள்ளது. அதனையொட்டி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சந்தானத்தின் டிடி திரைப்படம் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வெளியாகியுட்டி சந்தானம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.
பின்னர் செய்திகளிடம் கூறியபோது, 'அனைத்து ரசிகர்களும் பார்க்கக்கூடிய குடும்பப் பாங்கான திரைப்படம். அதேபோல, சந்தானத்தின் காமெடி மீண்டும் இதில் பார்க்கலாம். மேலும் தனது ரசிகர்களுக்கு திரைப்படம் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் நல்ல விளையாட்டுகளை விளையாட வேண்டும்', என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு முன்னர், திரைப்படம் பார்க்க வந்த சந்தானத்தின் ரசிகர்கள் 50 அடி உயர பேனருக்கு பால் ஆபீஸ் செய்தனர். முதல் காட்சி அனைத்தையும் குறவர் மக்கள் உட்பட ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டது. ரசிகர்கள் அவர்கள் ஒருவர் கையில் சந்தானத்தின் உருவத்தை பச்சை குத்தியும் அவர்கள் அணிந்து இருந்த டீ-சர்ட் களில் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாகவும் பிரிண்ட் செய்தும் வைத்திருந்தனர்.
இதையும் படிக்க | ஒரே நாளில் வெளியான 9 திரைப்படங்கள்..!