கடலூர் : மகள் காதலுனுடன் தப்பி ஓட்டம்... மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்...

கடலூர் : மகள் காதலுனுடன் தப்பி ஓட்டம்... மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்...

சிதம்பரம் அருகே நிச்சயதார்த்தம் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் மகள் காதலனுடன் தப்பி ஓடியதால்  தாய், தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் தந்தையினர்க்கு நேர்ந்த பரிதாப நிலை :

கடலூர் : சிதம்பரம் அருகே வேலங்கிபட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி .இவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு மகன் ,ஒரு மகள் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்து விடவே இரண்டாவதாக சுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுசி(19) என்ற பெண் காலேஜ் படித்து வரும் நிலையில் நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த சுந்தரமூர்த்தி, சுமதி, இருவரும் வீட்டில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றவர்கள் நிலத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி என்ற மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். வயலுக்கு சென்ற  அக்கம் பக்கத்தினர் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் புதுச்சத்திரம் போலீசாருக்கு தெரிய வரவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி  பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்த போது நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றிருக்கலாம் என எண்ணி விஷம் அருந்தி தந்தை, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலங்கிப்பட்டு  கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.