பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி எப்போதும் போல் தொடர்ந்து பால் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து பல்வேறு கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், கால்நடை மருத்துவம் மற்றும் இனவிருத்தி வசதி, கால்நடை காப்பீடு வசதிகள், போன்ற நலத்திட்டங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் வழங்கப்படுகிறது என கூறினார்.
மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி எப்போதும் போல் தொடர்ந்து பால் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.