அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் 908 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தொிவித்துள்ளது.
கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் மின்சார வாரியத்திற்கு, நிலக்கரி கொண்டு வரும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்போில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை நடத்தி, 908 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதை உறுதி செய்து, சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தினா் உள்பட 10 போ் மீது வழக்கு பதிவு செய்தது. அதனை ரத்து செய்யக்கோாி அந்நிறுவனம் சாா்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும், மனுதாரா் சாா்பிலும் ஆஜரான வழக்கறிஞா்கள் வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டனா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வழக்கை ரத்து செய்ய மறுப்பு தொிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.