தஞ்சையில் மேலும் ஒரு மதமாற்ற சர்ச்சை...தூய்மை பணியாளர்களிடம் மதம் தொடர்பாக பேசும் மாநகராட்சி ஊழியர்...வீடியோ வைரல்.!!

தஞ்சை அருகே துய்மை பணியாளர்களிடம், மதம் தொடார்பாக மாநகராட்சி ஊழியர் பேசும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. 

தஞ்சையில் மேலும் ஒரு மதமாற்ற சர்ச்சை...தூய்மை பணியாளர்களிடம் மதம் தொடர்பாக பேசும் மாநகராட்சி ஊழியர்...வீடியோ வைரல்.!!

தஞ்சாவூர் மாநகராட்சியில் மருத்துவ அதிகாரியிடம், உதவியாளராக பணிபுரிந்து வருபவர் பெருமாள். இவர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை செய்யும் பணியாளர்களிடம் மதம் சார்ந்து பேசும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் எனக்கு 3 லட்சம் கொடுத்தார். நாம் அனைவரும் இயேசுவின் பிள்ளைகள் என்றும், நமக்கு அவரை பிடிக்காததால் தான், நாம் கஷ்டப்படுகிறோம், நான் சென்டிரிங் வேலை பார்த்ததாகவும், எனக்கு வட்டியில்லாமல் 3 லட்சம் கொடுத்திருப்பதாக அவர் பேசுகிறார்.

தற்போது அந்த வீடியோ சமூக வளைதலத்தில் வேகமாக பரவி வருகிறது. அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இந்த வீடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து முன்னணி அமைப்பினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.