காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்த கொரோனா.....யாரைக் குறிப்பிடுகிறார் கெலாட்!!!

காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்த கொரோனா.....யாரைக் குறிப்பிடுகிறார் கெலாட்!!!

2018 டிசம்பரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததில் இருந்தே கெலாட்டும், பைலட்டும் அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு "பெரிய கொரோனா" கட்சிக்குள் நுழைந்தது என முதலமைச்சர் கெலாட் கூறிய வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது நிரூபரின் கேள்விக்கு பதிலளித்த கெலாட், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், “நான் எல்லா சவால்களையும் சந்திக்க ஆரம்பித்துவிட்டேன்.  முன்பு நாட்டில் கொரோனா வந்தது.  அதே நேரத்தில் எங்கள் கட்சிக்குள் ஒரு பெரிய கொரோனாவும் நுழைந்தது” என்று பதிலளித்துள்ளார்.

கெலாட்டின் இந்த பதில் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பைலட்டின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிர்வினையாகக் கருதப்படுகிறது.

ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட்டின் இந்த கருத்துக்கு காங்கிரஸின் தலைமையிலிருந்து எந்த கண்டனமும் தெரிவிக்கப்படாததோடு பைலட்டும் இதற்கான எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  வெடி விபத்து... முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் என்ன?!!!