கொரோனா...பிரதமரின் சிறப்பான ஏற்பாடுகள்...பாராட்டிய அமைச்சர்!!!

கொரோனா...பிரதமரின் சிறப்பான ஏற்பாடுகள்...பாராட்டிய அமைச்சர்!!!
Published on
Updated on
1 min read

கொரோனாவைச் சமாளிப்பதற்காக தொலைதூரப் பகுதிகளில் இரத்தம், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.   2014 இல் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, இன்று நாட்டில் 22 எய்ம்ஸ்கள் உள்ளன. 

நாட்டில் கொரோனாவை எதிர்கொள்ள தயாராகி வருவதற்காக பிரதமர் மோடிக்கு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டு தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடனான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.  

பிரதமர் மோடியின் தெளிவான சிந்தனை - 'ஒரே நாடு ஒரே ஆரோக்கியம்' என்பதே எனக் கூறிய சிந்தியா அவரது ஆதரவுடன், நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கோவிட் நோயை எதிர்கொண்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.   மேலும் ஒரே ஒரு பரிசோதனை கூடம் இருந்த நாட்டில், இன்று  3388 பரிசோதனை கூடங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைதூர பகுதிகளில்..:

தொலைதூர பகுதிகளில் இரத்தம், தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன எனக் கூறிய அவர் 2014 இல் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று நாட்டில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன எனக் கூறியுள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com