2021 - ல் வைக்கப்பட்ட 148 கோரிக்கைகள் பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்...!

2021 - ல் வைக்கப்பட்ட 148 கோரிக்கைகள் பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்...!
Published on
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆய்வு கூட்டம் இரண்டு கட்டமாக நடைபெற்றதாகவும், இன்று உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தை சந்தித்ததாகவும், இதில் ஒவ்வொரு சங்கத்தை சார்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கைகள் கேட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து, 2021-ல் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 148 கோரிக்கைகள் வைக்கபட்டதாகவும், அதில் ஏறத்தாழ 48 கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதாகவும், சில கோரிக்கைகள் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் இருப்பதாகவும் கூறினார்.  
இன்றும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இருப்பதை தொடர்ந்து, அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும், சனிக்கிழமை அன்று அடுத்த கட்ட ஆசிரியர்களை சந்திப்பதாகவும், தொடர்ந்து அவர்கள் அளிக்கும் கோரிக்கைகளையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com