காங்கிரசின் பேருந்து பயணம்...பாஜகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம்?!!!

காங்கிரசின் பேருந்து பயணம்...பாஜகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம்?!!!

காங்கிரசின் பேருந்து பயணத்திற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பேருந்து பயணம்:

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பேருந்து பயணத்தை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.  மாநிலத்தில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே தங்களது நோக்கம் என்று தெரிவித்திருந்த நிலையில் பிரச்சாரத்தை பெலகாவியில் இருந்து காங்கிரஸ் தொடங்கவுள்ளது.  

ஊழலாட்சி:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பயணத்திற்கான சின்னத்தை வெளியிட்டு பேசும் போது, ​​பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலத்தில் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது எனவும் கர்நாடகாவின் வளர்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சிவக்குமார் கூறியுள்ளார்.  மேலும் பாஜக வகுப்புவாத அரசியலிலும், மாநிலத்தை முடக்கும் கொள்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவை... :

பாஜக அரசின் ஊழல் மற்றும் பொய்களை அம்பலப்படுத்தவே இந்த பயணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் பேருந்து பயணத்திற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்ட்டு ஒரு குழு சித்தாராமையாவாலும்  மற்றொரு குழு டி.கே.சிவகுமாராலும் வழிநடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.  சட்டசபை தேர்தலுக்கு முன், மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் இந்த பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மகாராஷ்டிரா அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்.... காரணம் என்ன???