வடகிழக்கை பிரிக்கும் அரசியலை செய்த காங்கிரஸ்... சரிசெய்த பாஜக!!!

வடகிழக்கை பிரிக்கும் அரசியலை செய்த காங்கிரஸ்... சரிசெய்த பாஜக!!!

மேகாலயா மாநிலம் நாகலாந்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.   பிரதமரின் வருகையையொட்டி இரு மாநிலங்களிலும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பயணம்:

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  பிரதமர் முதலில் நாகாலாந்தில் உள்ள திமாபூரை அடைந்து அங்கு உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் நாகாலாந்து அரசை காங்கிரஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கியது எனவும் டெல்லி முதல் திமாபூர் வரை குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை அளித்தது எனவும் விமர்சித்துள்ளார்.   

வடகிழக்கை பிரிக்கும்:

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ”கடந்த 9 ஆண்டுகளில் நானே பலமுறை இங்கு வந்துள்ளேன்.  நாகாலாந்துக்கு முதல் பெண் மாநிலங்களவை எம்.பி.யை வழங்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கே கிடைத்தது.  மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாடு இயங்குவதில்லை.  மக்களை மதித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து கொண்டுதான் நாடு இயங்குகிறது.” என்று கூறியுள்ளார்.  அதனோடு ”இதற்கு முன்னர் இருந்த வடக்கு-கிழக்கு பிரிவினை அரசியலை மாற்றியுள்ளோம்.  அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இதனை செய்துள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மாறிய பெயர்... சரிசெய்த ஊடகவியலாளர்கள்...!!