ஓட்டுக்கு கொலுசா? விளக்கமளித்த உதயநிதி!!!

ஓட்டுக்கு கொலுசா? விளக்கமளித்த உதயநிதி!!!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கொலுசு கொடுத்து வாக்கு சேரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மக்கள் தெளிவான முடிவு  எடுப்பார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை  அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைப்பதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பொய்யான குற்றாச்சாட்டு என்று கூறினார். 

தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுகவினர் கொலுசு கொடுத்து வாக்கு சேகரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உதயநிதி, மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள் என பதிலளித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com