தூய்மைப் பணிகள் சிறப்பாக நடக்கிறது...அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

தூய்மைப் பணிகள் சிறப்பாக நடக்கிறது...அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
Published on: 
Updated on: 
1 min read

சென்னை கோயம்பேட்டில் புதிதாக அமைய உள்ள பூங்கா மற்றும் மயிலாப்பூர் விளையாட்டு திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் 10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் கூடிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் குறித்து சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர் பாபு ஆய்வு  மேற்கொண்டார்.  

இதனைத்தொடர்ந்து, மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, சென்னையில் விளையாட்டு திடல் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருதாக கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com