கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் - 3 பேர் படுகாயம்!

கோவை அருகே கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள திருமலையாம் பாளையம் பகுதியில் நேரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்ச்சுரல் நிகழ்ச்சி நடந்தபோது, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்பு வீட்டிற்கு செல்வதற்காக சென்ற மூன்று மாணவர்களை மரப்பாலம் அருகே மடக்கிய அதே கல்லூரி மணவர்கள் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதையும் படிக்க : ரயில் ஏறும் போது தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்!

இதில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தகவல் அறிந்த மற்ற மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இருப்பினும், கல்லூரி கல்ச்சுரல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.