இந்தியாவிடம் இருந்து தகுந்த பதிலடியைப் பெற்றாலும், சீனா தனது கோமாளித்தனங்களில் இருந்து விலகவில்லை.
டிஜிபி மாநாடு:
சமீபத்தில் டிஜிபி மற்றும் ஐஜிபி மாநாடு இந்தியாவில் லக்னோவில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய காவல் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த கட்டுரைகளில் சீனாவின் புதிய தந்திரம் தற்போது தெரியவந்துள்ளது.
தந்திரம் என்ன?:
தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் தொகையை கடனாக கொடுத்து, இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா விரும்புவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடன்கள் மூலம்:
இந்தியாவின் அண்டை நாடுகளில் கடன்கள் மூலம் அதனுடைய செல்வாக்கை அதிகரிக்க சீனா முயற்சிப்பதாக மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த வருடாந்திர மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் மற்றும் நாட்டின் 350 உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அண்டை நாடுகளுடன்:
கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் ராணுவத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளிலும் சீனவின் நடவடிக்கைகள் அதே வேகத்தில் அதிகரித்துள்ளன.
செல்வாக்கை குறைக்கவே...:
இதையெல்லாம் செய்வதன் பின்னணியில் சீனாவின் நோக்கம் தெளிவாக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கவே சீனா இவ்வாறு நடது கொள்வதாக அந்த அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் செல்வாக்கைக் குறைப்பதன் மூலம், ஆசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் தன்னிச்சையாகச் செயல்பட விரும்புகிறது சீனா.
இந்தியாவின் அண்டை நாடுகள் மீது கண்:
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிற நிதி உதவி என்ற பெயரில், சீனா தனது பெரும் தொகையை செலவழித்து வருவதாகவும், நாட்டின் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரி சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உதவி பெற்ற அண்டை நாடுகளும் சீனாவை தங்கள் மிக முக்கியமான கூட்டாளி என்று வர்ணித்து வருகின்றன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: விசாரணைக்கு பயந்து மோடியுடன் இணையும் மமதா!!!