இந்தியாவை கண்காணிக்கும் சீனாவின் உளவு பலூன்.....

இந்தியாவை கண்காணிக்கும் சீனாவின் உளவு பலூன்.....

சீனா அதன் உளவு பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேல் பறந்திருந்த சீனாவின் உளவு பலூனை அந்நாட்டு ராணுவம் சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. 

மொண்டானா மாகாணத்தில் உள்ள அமெரிக்காவின் அணு ஆயுத தளத்திற்கு மேல் மர்மமான பலூன் ஒன்று பறந்தது.  இதுகுறித்து ஆய்வு செய்த அந்நாட்டு ராணுவம், அது சீனாவுக்கு சொந்தமான உளவு பலூன் என்று கண்டுபிடித்தது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அணு ஆயுத தளத்தை விட்டு பலூன் நகரக் காத்திருந்தனர். 

இதற்கிடையில், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பலூன் நகர்ந்ததை அடுத்து அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுடன் அந்நாட்டு ராணுவம் பலூனை சுட்டு வீழ்த்தியது. 

அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனின் கண்டுபிடிப்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் இந்தியா உட்பட அதன் நட்பு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.  அதில் சீன கண்காணிப்பு பலூன், பல நாடுகளின் இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த கண்காணிப்பு பலூன், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சீனாவின் வளர்ந்து வரும் மூலோபாய ஆர்வமுள்ள நாடுகளில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:   சென்னைக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்தல்....