இந்தியாவில் சீனா ஊடுருவல்...நடந்தது என்ன?!!

இந்தியாவில் சீனா ஊடுருவல்...நடந்தது என்ன?!!

மக்மோகன் எல்லைக் கோட்டில் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா-சீனா உறவுகளுக்கு மோசமானது. சீனா ராணுவத்தின் ஊடுருவல் மிகவும் தவறானது.  நமது இந்திய வீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள். 

தவாங் தாக்குதல்:

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீனா ராணுவம் இந்தியாவிற்குள் நுழைந்தது.  இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வீரர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.  மேலும் சீனப் படையினரின் இந்த திடீர் தாக்குதலுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்திய தரப்பில் இருந்து 20 வீரர்கள் காயம் அடைந்த நிலையில், காயமடைந்த சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கும் என கூறப்படுகிறது.  இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அருணாச்சல கிழக்கு பாஜக எம்பி தபீர் காவ் அறிக்கை அளித்துள்ளார். 

பாஜக எம்.பி கூறியதென்ன?:

பாஜக எம்பி தபீர் காவ் கூறுகையில், "இந்திய ராணுவத்தின் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர், ஆனால் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்திய வீரர்கள் தங்கள் நிலத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டார்கள். சீன ராணுவத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.

மேலும் "மக்மோகன் எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது இந்தியா-சீனா உறவுகளுக்கு மோசமானது.  சீனா ராணுவத்தின் இந்த ஊடுருவல் மிகவும் தவறானது.  ஏனெனில் நமது இந்திய வீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள்.  சீனா எவ்வளவு முயற்சி செய்தாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம்.  என்ன நடந்தாலும் அது சரியல்ல.  உங்களால் நாங்கள் அடிபடுவோம் என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. நீங்கள் செயல்படும் அதே சக்தியுடன் நாங்கள் பதிலளிப்போம். ” என்று கூறியுள்ளார் பாஜக எம்.பி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தவாங் மீதான சீனாவின் கண்...இந்தியாவில் ஊடுருவிய சீனா...என்ன செய்யபோகிறது இந்திய ராணுவம்!!!