தஞ்சாவூரில் சொதப்பிய முதலமைச்சர் நிகழ்ச்சி.....

தஞ்சாவூரில் சொதப்பிய முதலமைச்சர் நிகழ்ச்சி.....
Published on
Updated on
1 min read

விவசாயிகளிடம்  இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகளை, மழை - வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய சேமிப்பு கிடங்கு தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது.  15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, சுமார் 1000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கான்கிரீட் தளம் மற்றும் மேற்கூரையுடன் 31 நெல் சேமிப்பு கிடங்கு  கட்டப்பட்டு, அதனை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பாக எந்த ஒரு ஏற்பாடும் செய்யாதால், நிகழ்ச்சி சரியாக நடைபெற முடியாத சூழல் உருவானது.  முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைப்பதை காணும் வகையில் பெரிய திரை இல்லாததால் அங்கு சென்னையில் முதலமைச்சர் திறந்து வைத்தாரா, திறக்கவில்லையா என்ற குழப்பத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் தஞ்சாவூரில் அமர்ந்திருந்தனர். 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையை சேர்ந்தவர்கள் விளம்பர வாகனத்தை அவசர அவசரமாக எடுத்து வந்து குடோனில் நிறுத்தி நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்தனர்.  ஆனாலும் அந்த வாகனமும் பழுதானதால் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டது.  நிகழ்ச்சி முற்றிலும் தடைப்பட்டதால் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவசர அவசரமாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com