பிறந்தநாளில் தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்..!!

பிறந்தநாளில் தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர்..!!
Published on: 
Updated on: 
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வகையில் அவரது  70-வது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  முதலமைச்சருடன் மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் மலர்தூசி மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்வை முடித்து விட்டு பெரியார் திடலுக்கு செல்கிறார் முதலமைச்சர்.

அதன் பிறகு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com