சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
இடைநிலை பராமரிப்பு மையம் திறப்பு:
225 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் காப்பகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பில் இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
மனம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்:
தொடர்ந்து, பள்ளி மாணவர்களிடையே எழும் தற்கொலை சிந்தனை, மனஅழுத்தம் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ”மனம்” என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் காப்பகத்தில், 75 மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளை முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேறிய நிகழ்வு:
இந்நிலையில், 28 ஆண்டுகளுக்குப்பின், தமிழக முதலமைச்சர் நேரடியாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சென்று ஆய்வு செய்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.