புதிய சுற்றுலா தலமாக மாறும் செங்கல்பட்டு - திருப்பூர் ஏறி.. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு!

புதிய சுற்றுலா தலமாக மாறும் செங்கல்பட்டு - திருப்பூர் ஏறி..  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு!

பூண்டி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரி பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீர் விளையாட்டுகள், பல்வேறு வகையான படகுகள், வாட்டர் ஸ்கூட்டர்கள், விரைவுப்படகு வசதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளதாகவும், அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில  படகு சவாரி, நீர் விளையாட்டுகள் , அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கொள்வாய் ஏரி அமைந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இங்கு ஏற்படுத்துவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

மேலும் படிக்க: ரூபிக் கியூபால் திருவள்ளுவர் செய்த மாணவி..! அதுவும் திருக்குறளை ஒப்பித்துக் கொண்டே..

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு சவாரி‍, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ள சுற்றுலா பயணிகளை இது பெரிதும் கவரும் என்பதோடு, சுற்றுலாத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.