நிலவை சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் LVM - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. வெற்றிகரமாக சென்றடைந்த விண்கலம், ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்து நிலவை சுற்றிவரும் சந்திரயான் 3 விண்கலத்தின், சுற்றுவட்ட பாதை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது, 150 × 177 கிலோமீட்டர் தூர நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் சுற்றி வருகிறது. மேலும் அடுத்த சுற்றுவட்ட பாதை குறைப்பு வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி செய்யப்படும்.
இவ்வாறு படிப்படியாக சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைக்கப்பட்டு 100 கிலோ மீட்டருக்கு கீழான சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும் போது அதில் இருந்து லாண்டர் கருவி 23ஆம் தேதி வெற்றிகரமாக தரை இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.