மக்களே உஷார்...அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

மக்களே உஷார்...அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதை அடுத்து தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு:

தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு... மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

ஐந்து நாட்களுக்கு மழை:

இதையடுத்து இன்று முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.