கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை  எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை அலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாலமுத்து - நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியினை மேற்கொண்டபோது, அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் மூலமாக அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தினேன்.

இந்நிலையில் தற்போது எந்த முகாந்திரமும் இல்லாமல் மீண்டும் கிருஷ்ணா, கோதாவரி படுகைப் பிரிவு அலுவலகத்தை எந்தவிதமான வலுவான காரணமும் இன்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கொண்ட இந்த அலுவலகத்தின் கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவில் தமிழக இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இந்த அலுவலகம் மாற்றப்பட்டால், எண்ணற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகும். தற்போதைய கணினி யுகத்தில் இந்த மாற்றம் தேவையற்றது.

எனவே, கிருஷ்ணா, கோதாவரி படுகைப் பிரிவு அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com