கோயிலுக்குள் நுழைவதில் சாதிய பாகுபாடு - சமாதான பேச்சுவார்த்தை - பட்டியலின மக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைவதில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இன்று பட்டியல்யின மக்களுடன் அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து சுவாமி தரிசனம் செய்யும் மகிழ்ச்சியான நிகழ்வு

கோயிலுக்குள் நுழைவதில் சாதிய பாகுபாடு - சமாதான பேச்சுவார்த்தை - பட்டியலின மக்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று  இறையூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் இங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை  பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதை அடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை பயன்படுத்தியது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலை திறந்து பட்டியல் இன மக்களை வழிபடவும் செய்ய வைத்தார். இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் கோயிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், அதேபோல் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தபட்ட சம்பவம் இவை குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த சமாதான கூட்டத்தில் இறையூர் கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூகங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் 26 பேர் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் சாதிய வன்மங்களுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் 
இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களையும் பாகுபாடு இன்றி வழிபாடு நடத்த அனுமதிப்பது.

மேலும் படிக்க | சமூக நீதி காத்த வீரமங்கை - மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு யார்?

குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவாகரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது..

இதே போல தேநீர் கடையில் இரட்டை கொலை முறைகள் இன்றி சாதி சமூக வேறுபாடுகளை கலைந்து அனைத்து சமூக மக்களும் சமமாக வாழ்வது
உள்ளிட்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று  இறையூர் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைவதில்  சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த  புகாரின் அடிப்படையில், இன்று பட்டியல்யின மக்களுடன் அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து சுவாமி தரிசனம் செய்யும் மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்  சின்னதுரை  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | புதுக்கோட்டை: யாரும் தப்பிக்க முடியாது..! அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்..

இதில் பட்டின மக்களுடன், மற்ற சமூக மக்களும் இணைந்து வழிபட்டனர். அப்போது  பட்டியலிடமக்கள் கொண்டு வந்த பூமாலைகள் அய்யனாருக்கு அணிவித்து பூஜை நடைபெற்றது. இனி தொடர்ந்து அனைவருக்கும் உங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வால் பட்டியலின மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகின