ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத முடியாது என தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
எனவே, தலிபான்கள் எந்த நேரத்திலும் தங்கள் உத்தரவை திரும்ப பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் தலிபான் அரசு பெண்களுக்கு எதிரான தடையை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே நடந்து வருகிறது. தற்போது பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: திடீர் நிலநடுக்கம்..... அதிகரிக்கும் உயிரிழப்புகள்....