"சர்ச்சைக்குரிய படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அதிர்ச்சியளிக்கிறது" முதலமைச்சர் ஸ்டாலின்!

"சர்ச்சைக்குரிய படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அதிர்ச்சியளிக்கிறது" முதலமைச்சர் ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், நாட்டின் 69-வது தேசிய விருதுகளில், தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தொிவித்துள்ள முதலமைச்சா், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஷ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கும் வாழ்த்துகளை தொிவித்துள்ளாா்.

மேலும் சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்தினை தொிவித்துள்ள மு.க.ஸ்டாலின், சர்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாவும் குறிப்பிட்டுள்ளாா். 

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்பு தன்மை இல்லாமல் இருப்பது தான் அந்த விருதுகளைக் காலம் கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும் என தொிவித்துள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளாா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com