
உலகின் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரங்கள் மந்தநிலையால் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் இந்திய பட்ஜெட் 2023 சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் மாற்று எரிசக்திக்கான வழிமுறைகளை ஊக்குவிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆற்றல் மாற்றத்திற்கான முன்னுரிமை மூலதனம் ரூ. 35,000 கோடி.
பசுமைக் கடன் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும்.
4,000 மெகாவாட் அளவிலான பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பதற்கு அரசு ஆதரவு.
தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்:
ரூ. 19,700 கோடி செலவில் தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் நாட்டில் குறைந்த கார்பன் பயன்பாட்டிற்கு மாறவும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்.
-நப்பசலையார்