பட்ஜெட்2023: 9 மடங்காக அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு!!!

பட்ஜெட்2023:  9 மடங்காக அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு!!!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  சேமிப்பு திட்டங்களைக் குறித்தும் ரயில்வே குறித்தும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவைக் குறித்து காணலாம்.

சேமிப்பு திட்டங்கள்:

  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச வைப்பு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

  • மாத வருமான திட்ட வரம்பு ரூ.9 லட்சமாகவும், கூட்டு கணக்குகளுக்கு ரூ.15 லட்சம் என இரு மடங்காக உயர்த்தப்படும்.

ரயில்வேக்கு மிகப்பெரிய ஊக்கம்: 

  • நடப்பு நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு. 

  • இது ரயில்வேக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச ஒதுக்கீடு.

  • நிதியாண்டு 2014கிற்கான ஒதுக்கீடுகளை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு இது அதிகமாகும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பட்ஜெட்2023: விலை அதிகரிக்கப்பட்ட பொருள்கள் vs விலை குறைக்கப்பட்ட பொருள்கள்!!!