திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை... மீறினால் கடும் நடவடிக்கை!!

Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு செல்கிறார். 

பின்னர், தஞ்சையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலையில் மீண்டும் திருச்சிக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com