சென்னையில் டிரோன்கள் பறக்க தடை... காரணம் என்ன?!!

சென்னையில் டிரோன்கள் பறக்க தடை... காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வருகின்ற 8 ஆம்தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 8 ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார்.  அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் அமைச்சர்கள்  மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாடு ஆளுநர் மற்றும்  கட்சி பிரதிநிதிகள், கலந்து கொள்கிறார்கள்.  மேலும் விமான நிலையத்தில் இருந்து பா.ஜ. க தொண்டர்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து சேலம் வரை புறப்படும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அங்கு பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார். 

இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மீண்டும் தனி விமானம் மூலமாக கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.  இதற்கான முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டிருக்கிறது.  குறிப்பாக சென்னை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com