அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பலே கில்லாடி ; பணத்தை மீட்க கோரி மனு... 

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பலே கில்லாடி ; பணத்தை மீட்க கோரி மனு... 
Published on
Updated on
2 min read

கிரிக்கெட் விளையாடும் போது நண்பர்களாக பழகி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பண மோசடி செத்த போலி நண்பன்  :

திருச்சி: பாலக்கரை விளையாட்டு மைதானத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் விளையாட வந்துள்ளார். அவர் தன்னை கார்த்திக் என்றும் சேலத்தை சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் வேல்முருகன் என்பவரோடு நெருங்கி பழகியுள்ளார். வேல்முருகன் மூலம்  வேல்முருகனின் நண்பர்களோடும் நெருங்கி பழகியுள்ளார்.ஒரு கட்டத்தில் தான் அரசு வேலை செய்து வருவதாகவும் உங்கள் அனைவருக்கும் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி அதற்கு 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும்  கூறியுள்ளார்.எனக்கு பல நபர்களை தெரியும்  முதற்கட்டமாக அனைவரும் ஒரு லட்சம் தாருங்கள் எனக் கூறி சுமார் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணம் வாங்கி உள்ளார். அவர் கூறியதை நம்பி  ஒவ்வொருவரும் மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கார்த்திக் என்று கூறிய நபரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.அந்தப் பணத்தை அவர் நேரடியாக வாங்காமல் வேல்முருகன் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். அவர்களும்  வேல்முருகன் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர். 

பணத்தை மீட்க கோரி மனு:

மோசடி செய்த அந்த போலி நண்பன் வேல்முருகனிடமிருந்து ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு அதன் மூலம்  பணத்தை வாங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக அவரை பணம் கொடுத்தவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை எங்கு தேடியும் கிடைக்காததால் அவர் குறித்து விசாரித்துள்ளனர். அவருடைய இருசக்கர வாகன எண்ணை வைத்து இணையதளத்தில் பார்த்ததில் அவர் பெயர் பார்த்திபன் , நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அதன் பின்பு தான் தாங்கள் ஏமாந்ததை அந்த இளைஞர்கள் உணர்ந்தனர். பாதிக்கப்பட்ட  வேல்முருகன் தலைமையில் அவருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களும்  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில்  ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com