பாஜக மற்றவர்களுக்கு தான் உபதேசம் செய்யும் - அமைச்சர் கருத்து

பாஜக மற்றவர்களுக்கு தான் உபதேசம் செய்யும் - அமைச்சர் கருத்து
Published on
Updated on
1 min read

தமிழக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணனின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

 பாஜக தேர்தலில் இலவசத்தை அறிவிப்பது வழக்கம் 

செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரிய கருப்பன் பேசும் போது:  கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த மகளிர்க்கு 2 ஆயிரம் உதவி தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்டவைகள் ஏற்கனவே தமிழகத்தில் அமுலில் உள்ளது. இலவசம் வழங்குவதை குறை கூறிய பாஜக மற்ற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இலவசத்தை அறிவிப்பது வழக்கம்.

தற்போது சொல்லிவிட்டு செய்கின்றனர்

பாஜகவினர் மற்றவர்களுக்குதான் உபதேசம் செய்வார்கள் அவர்கள் அதனை கடைபிடிப்பதில்லை. ஏற்கனவே 2ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிட்ட போது சொல்லாமல் செய்தனர். தற்போது சொல்லிவிட்டு செய்கின்றனர். கால அவகாசம் கொடுத்துள்ளனர். இதனுடைய பாதிப்பு போகப் போகத்தான் தெரியும். கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com