"அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!" - டி.ஆர்.பாலு

அண்ணாமலை மீது 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.....
"அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!"   -   டி.ஆர்.பாலு
Published on
Updated on
1 min read

தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தைத்  தடுத்து நிறுத்தி, விவசாயிகளைக் காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தஞ்சை பழைய பேருந்துநிலையம் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பேசும்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில்  நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வரின் உத்தரவின்படி, துறை அமைச்சரிடம் பேசி, கடிதம் அனுப்பி அந்த ஏலம் நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது, யார் யாரோ பாராட்டு விழா நடத்திக் கொள்கின்றனர் என்றும் கூறினார். மேலும், அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்றும், அவர் தன்னை 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக பேசியுள்ளதாகவும் அப்படியானால், அண்ணாமலை நீதிமன்றத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தன அண்ணாமலைக்கு நோட்டீஸ் கொடுத்து 12 ஆகியும் இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை எனவும், தன மீது கிரிமினல் வழக்கு தொடரபடாத காரணத்தால் அண்ணாமலை மீது வரும் 8-ம் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடரப்போவதாகத் தெரிவித்தார்.
அதோடு, அதற்கு மேல் அண்ணாமலை மீது 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். சிவில் வழக்கு பின்னர் தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசியல் நாகரீகம்  என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் உள்ளனர் என்றும் பாஜகவில் சேருபவர்கள் எல்லாம் போலீஸாரால் தேடப்படுவர்கள் தான் எனவும்,  இது போன்ற ஆட்களை ஏன் சேர்க்கிறார்கள் என்றால் வரும் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தான் என்றும் விமர்சித்தார். தொடர்ந்து, திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது என்றும், அதை  ஒவ்வொரு தொண்டனும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், திமுகவை அசைத்து பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ யாராலும் முடியாது என்றும், திமுக கட்சியானது,  எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்த கட்சிதான் எனவும் கூறினார். அதோடு, திமுகவில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களிடம் கூட பேச தகுதி இல்லாதவர் தான் அண்ணாமலை எனவும்  டி.ஆர்.பாலு கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com