கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகளிர் உரிமை தொகை குறித்து நன்றிக் கோலமிட்ட பெண்களை மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பு பகுதியில் இன்று திமுக மகளிரணி யை சேர்ந்த பெண்கள் சிலர் ஒரு தெருவில் " கலைஞர் ஆயிரம் நன்றிகள்" என மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதை வரவேற்கும் விதமாக கோலமிட்டனர்.
அவர்கள் கோலத்திற்கு முன்பாக நின்று கட்டைவிரல் காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது திடீரென அவ்வழியாக வந்த ஒருவர் நான் இந்த ஊரை சேர்ந்த பா.ஜ.க., நிர்வாகி எனவும், எங்கள் ஊரில் எப்படி நீங்கள் எப்படி நன்றி தெரிவித்து கோலம் போடலாம் என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
மேலும், "எங்கள் ஊரில், எங்கள் பணத்தில் போடப்பட்ட சாலையில், திமுக திட்டத்திற்கு கோலம் போடுவது தவறு என பேசி, பெண்களை துரத்தியுள்ளார். இதனிடையே திமுக மகளிரணியினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம், அங்கு வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் என கூறிய சிறிது நேரத்தில், ஆவேசமாக பேசிய அந்த நபர் நீங்கள் கோலமிடுங்கள் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறியவாறு அங்கிருந்து நைசாக நகர்ந்துவிட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது