ஆட்சியை கலைத்த பாஜக... மிரட்டிய திமுக....

ஆட்சியை கலைத்த பாஜக... மிரட்டிய திமுக....

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி கட்சி பயணமாக சென்னை வந்துள்ளார்.  சென்னை  விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழ்நாடு பாஜக:

வேறு மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாடு பா.ஜ.க. எந்த கட்சி பணிகளும் செய்வதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.  திமுக, அதிமுக என கூட்டணி வைத்து அரசியல் செய்ய கூடாது எனவும் பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  எல்லா தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி வைத்தால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆட்சியை கலைத்தபோது:

மேலும், திமுக கொள்கை வழியாக எதுவும் இல்லை எனவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதற்காக பேசி கொண்டே இருக்கும் எனவும் கூறியுள்ளார்.  ஆனால் தேர்தல் வரும் போது வேறு மாதிரியாக பேசுவார்கள் எனவும் இதனால் தமிழ்நாட்டில் ஒரு முறை ஆட்சியை கலைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.  

அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஒடும் என்று திமுகவினர் கூறினார்கள் எனவும் ஆனால் பூனை குட்டி கூட வெளியே வரவில்லை எனவும் கிண்டலாக பேசியுள்ளார். 

மீண்டும் மோடி?:

கோவில்களில் அராஜகம் செய்ததால் தட்டி கேட்டேன் எனவும் கோவில் பூசாரிகளுக்கு திராவிடர் கழகம் முலமாக தொல்லையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும் எனவும் பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி அறிவிக்க வேண்டும் ஆனால் அது எதுவும் முடிவாகவில்லை எனவும் கூறியுள்ளார். 

ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் இணைந்தால் இருக்கிற வாய்ப்பும் பறிபோய்விடும் என விமர்சித்துள்ளார் சுப்பிரமணிய சாமி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை.......