27 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை தழுவிய பாஜக!!!

27 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை தழுவிய பாஜக!!!
Published on
Updated on
1 min read

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகவுள்ளது.  மகாராஷ்டிராவில் பிப்ரவரி 26 ஆம் தேதியும், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற்றது.  அருணாச்சல பிரதேசத்தின் லும்லா தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

ஐந்து மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.  மேற்கு வங்காளத்தில் உள்ள சாகர்டிகி, தமிழ்நாட்டில் ஈரோடு, அருணாச்சலப் பிரதேசத்தின் லும்லா, ஜார்கண்டில் உள்ள ராம்கர் மற்றும் மகாராஷ்டிராவின் கஸ்பாபேத், சின்ச்வாட் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில் தெளிவாக வெளியாகவுள்ளன.

முன்னிலை:

ராம்கர் (ஜார்க்கண்ட்) இடைத்தேர்தலில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்டி) கட்சி முன்னிலை வகிக்கிறது.  சின்ச்வாட் (புனே, மகாராஷ்டிரா) இடைத்தேர்தலில் பாஜக முன்னிலையிலும் கஸ்பா பெத் தொகுதியில் (புனே, மகாராஷ்டிரா) காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்க சட்டப் பேரவையின் சாகர்டிகி தொகுதியில் இடதுசாரி ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாஸ் முன்னிலையில் உள்ள நிலையில் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு:

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கஸ்பாபெத், சின்ச்வாட் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.  இரண்டு தொகுதிகளுக்கும் பிப்ரவரி 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-என்சிபி கூட்டணியான மகாவிகாஸ் அகாடிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.  

பாஜகவின் ஹேமந்த் ரசானே மற்றும் மஹா விகாஸ் அகாடியின் ரவீந்திர தங்கேகர் ஆகியோருக்கு இடையே போட்டி இருந்தது. இதற்கிடையில், கஸ்பா பெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வெற்றி பெற்றுள்ளார். 1995க்குப் பிறகு முதல்முறையாக இந்தத் தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com