கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்களை காப்பதற்காகவும், என்.எல்.சியை வெளியேறுமாறும் வலியுறுத்தி பாமக சார்பில் நடைபயணம் தொடங்கியது.
என்.எல்.சி நிறுவனத்தின் தீவிர முயற்சி:
என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காக நிலம் வழங்குவோருக்கு சரியீட்டுத் தொகையாக 72 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு இதுவே காரணம்...சீமான் பேச்சு!
எழுச்சி நடைபயணம்:
இதனால், சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாட்கள் எழுச்சி நடைபயணம் நடைபெறும் என்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று பாமக சார்பில் குறிஞ்சிப்பாடி வானதியாபுரத்திலிருந்து நடைபயணம் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய எழுச்சி நடைபயணம் நாளை கரிவெட்டி கிராமத்தில் முடிவடைகிறது. இதனிடையே நடைபயணத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.