வெளியானது அவதார் 2: படத்தின் விமர்சனம் என்ன?

வெளியானது அவதார் 2: படத்தின் விமர்சனம் என்ன?

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் தமிழகத்தில் வெளியானது.

அவதார் 2:

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகள் கழித்து கிராபிக்ஸ் உள்ளிட்ட அடுத்தக்கட்ட தொழில்நுட்பத்தில் 'அவதார் - 2 தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ள நிலையில், மொத்தம் 160 மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

வெளியான அவதார் 2:

இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் “அவதார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் அவதார் - 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நள்ளிரவு 12 மணியளவில் திரையிடப்பட்டது. இதனைக் காண சுமார் 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

செண்டிமெண்டில் உருகவைத்த இயக்குனர்:

மேலும், அவதார் திரைப்படமானது சுமார் 13 ஆண்டுகள் கழித்து வெளியாவதால் கிராபிக்ஸ் காட்சிரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும், படம் கண்டிப்பாக தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனவும் ரசிகர்கள் தெரிவித்திருந்த நிலையில், அவதார் 2ம் பாகத்தை குடும்ப செண்டிமெண்டில் உருகவைத்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். 

இதையும் படிக்க: மக்களவை நிறைவேறிய மசோதா: வரவேற்று ட்வீட் செய்த முதலமைச்சர்!

ஒன் லைன் ஸ்டோரி:

மனிதன் VS ஏலியன் கான்செப்ட்டில் அவதார் படத்தை உருவாக்கி வரும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், அவதார் 2ஆம் பாகத்தில் ஜேக் சல்லியின் குடும்பத்திற்கும், அவரைச் சார்ந்திருக்கும் பாண்டாரோ மக்களுக்கும் மீண்டும் ஏற்படும் சிக்கல்களில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை குடும்ப செண்டிமெண்ட் உடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

விமர்சனம்:

முதல் பாகத்தில் முழுக்க முழுக்க போரை அடிப்படையாக வைத்தே கதை பின்னப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தில் குடும்ப சென்டிமென்ட்டில் உருக வைத்திருப்பதால், இப்படம் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றிப்போக வைத்துள்ளது. இருப்பினும், அவதார் 2 படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.