ஆஸ்திரேலியாவின் தேசிய தினம், பிரமாண்ட கப்பல் பேரணி மற்றும் பீரங்கி குண்டுகள் மரியாதையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், 65 ஆயிரம் ஆண்டுகளாக நாட்டை செழிப்புடன் வைத்திருந்ததாக பழங்குடியினரை கவுரவித்தார். தொடர்ந்து பெரும் கப்பல்களில் சாகசம் செய்தவாறு ராணுவத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வான்படையினரின் சாகசமும், பீரங்கி குண்டுகளுடன் ராணுவ நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வுகளைக் கண்டு ரசித்தனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: உலகின் சவாலான கடல் பந்தயம்.....