3 சுற்றுகள் நிறைவு...முதலிடத்தில் இருப்பது யார்?...பரிசுகளை வாங்கி குவிக்க போவது யாரு?

3 சுற்றுகள் நிறைவு...முதலிடத்தில் இருப்பது யார்?...பரிசுகளை வாங்கி குவிக்க போவது யாரு?

புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் மூன்றாவது சுற்று முடிவில் 13 பேர் காயமடைந்துள்ளனர். 

பாலமேடு ஜல்லிக்கட்டு :

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் நடந்து வருகிறது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த நிலையில், தற்போது வரை மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. அதில் முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் 200 காளைகள் மற்றும் 65 மாடு பிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

நான்காவது சுற்று ஆரம்பம் :

அந்தவகையில், மூன்றாம் சுற்றின் முடிவில் 15 காளைகளை அடக்கி மணி முதலிடத்திலும், 11 காளைகளை அடக்கி ராஜா 2ஆம் இடத்திலும், 9 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் 3ஆம் இடத்திலும் உள்ளனர். மேலும், மூன்றாவது சுற்று முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், 3 சுற்று முடிவில் வீரர்கள் உள்ளிட்ட சுமார் 13 பேர் காயமடைந்துள்ளனர். 

இதையும் படிக்க : 75வது இராணுவ தின விழா...அசத்திய மோப்ப நாய்கள்...வைரலாகும் வீடியோ!

இதனைத்தொடர்ந்து, போட்டி இறுதியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை சார்பில் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண மக்கள் குவிந்துள்ளதால்  16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.