சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மீது நம்பிக்கை கொண்டு வந்த ஆஷா!!!யார் அந்த ஆஷா!!!

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மீது நம்பிக்கை கொண்டு வந்த ஆஷா!!!யார் அந்த ஆஷா!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில், பெரிய பூனை இனமான சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு 70 ஆண்டுகால அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று, பிரதமர் மோடி எட்டு சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் காட்டுக்குள் விடுவித்துள்ளார்.  

மேலும் தெரிந்துகொள்க: நமீபியா சிறுத்தைகளே நீங்கள் நலமா?!!!

மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், நாட்டில் உள்ள பெரிய பூனைகளின் எண்ணிக்கையை மீட்டுருவாக்கும் முயற்சியில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகள் வரவேற்கப்பட்டு பூங்காவில் பராமரிக்கப்படுகிறது. 

சுற்றுசூழலுக்கான நம்பிக்கை:

பிரதமர் நரேந்திர மோடி சிறுத்தைகளில் ஒன்றிற்கு 'நம்பிக்கை' என்ற பொருள் கொண்ட ‘ஆஷா’ என்று பெயரிட்டுள்ளார். இந்தப் பெயர் நாட்டிற்கு ஒரு சிறப்புப் பொருளைக் கொண்டுள்ளது.  ஏனெனில் இது இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் மீதான நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.

ஆஷா நான்கு வயதுடைய பெண் சிறுத்தை, முதலில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது அதன் பெயர் குறிப்பிடப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பெண் சிறுத்தைக்கு ஆஷா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெயர் மாற்றப்படாத சிறுத்தைகள்:

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2.5 வயது சிறுத்தைக்கு டிபில்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. எட்டுப் பூனைகளில் மிகவும் வயதான பூனையான ஐந்து வயது சிறுத்தைக்கு சாஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சாஷாவின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் மற்றொரு சிறுத்தைக்கு சவன்னா என்று பெயரிடப்பட்டுள்ளது. கடைசி பெண் சிறுத்தைக்கு சியாயா என்று பெயரிடப்பட்டுள்ளது.  ஆண் சிறுத்தைகளுக்கு ஃப்ரெடி, எல்டன் மற்றும் ஓபன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அகிலேஷின் நடைப்பயணத்தை விமர்சித்த யோகி!!!