இந்த 21 அம்சங்கள் சரியாக உள்ளதா.... சரியாக இல்லையெனில் திரும்ப அனுப்பப்படும் வாகனங்கள்...!!

இந்த 21 அம்சங்கள் சரியாக உள்ளதா.... சரியாக இல்லையெனில் திரும்ப அனுப்பப்படும் வாகனங்கள்...!!
Published on
Updated on
1 min read

குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யவிட்டால் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட 31 பள்ளிகளைச் சேர்ந்த 369 கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  வரும் 31.5.2023 வரை இந்த வாகன சோதனை நடைபெற உள்ளது.   இதில்அரசின்அறிவுறுத்தல்படி 21 அம்சங்கள் சரியாக உள்ளதா என்பது ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சரியாக பணிகள் செய்யாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சரிசெய்து கொண்டு வந்து காண்பித்த பிறகுதான் வாகனங்களை இயக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவசரகால வழி வண்டியின் நடைமேடை படிக்கட்டு முன்பக்க கேமரா பின்பக்க கேமரா உள்ளிருக்கும் கேமரா அவை மானிட்டரில் தெரிகிறதா பின்பக்கம் வண்டியை எடுக்கும்போது சென்சார் இயங்குகிறதா அதுகுறித்து அறிவிப்பு டிரைவருக்கு கிடைக்கிறதா தீயணைப்பு கருவிகள் முதலுதவி மருந்துகள் வண்டிகளில் உள்ளதா தீயணைப்பு கருவிகள் ஓட்டுனர்களால் இயக்கப்படமுடியுமா என்பது உள்ளிட்ட 21 அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாமாபிரியா ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.  இந்த ஆய்வு பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா கூறியதாவது பள்ளிகளுக்குச் செல்லும் சிறிய குழந்தைகள் பாதுகாப்பாக வாகனங்களில் பயணம் செய்ய ஏதுவாக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து அதனை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் போது ஆய்வு செய்ய உத்தரவிட்டது எனவும்  அதன்படி வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருச்செங்கோடு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட வாகனங்களை சோதனை செய்யும் பணி நடந்தது எனவும் இதில் 23 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்து கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com