நீதித்துறையில் ஓரங்கட்டப்படுகின்றனரா பட்டியல் இனத்தினர்....விளக்கம் கேட்ட நாடாளுமன்ற நிலைக்குழு!!

நீதித்துறையில் ஓரங்கட்டப்படுகின்றனரா பட்டியல் இனத்தினர்....விளக்கம் கேட்ட நாடாளுமன்ற நிலைக்குழு!!
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளைத் தொடங்கும் அதிகாரம் கொலீஜியத்திடம் உள்ளது என்றும், எனவே சமூகப் பன்முகத்தன்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் முதன்மையான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், பொருத்தமான நபர்களின் பெயர்களை பரிந்துரைப்பதாகவும் நீதித்துறை தெரிவித்துள்ளது. 

மாற்றம் தேவையா?:

கடந்த ஐந்தாண்டுகளில் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என நாடாளுமன்ற குழுவிடம் நீதித்துறை தெரிவித்துள்ளது.  முப்பது ஆண்டுகளாக நீதித்துறைக்கு நீதிபதிகளை நியமனம் செய்வதென்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும் சமூக ரீதியாகவும் மாறவில்லை என்று நீதித்துறை கூறியுள்ளது.

அதிகாரம்:

உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளைத் தொடங்கும் அதிகாரம் கொலீஜியத்திடம் உள்ளது என்றும், எனவே சமூகப் பன்முகத்தன்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் முதன்மையான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், பொருத்தமான நபர்களின் பெயர்களை பரிந்துரைப்பதாகவும் நீதித்துறை தெரிவித்துள்ளது. 

நீதித்துறையின் விளக்கம்:

தற்போதைய முறையில், உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்யும் நபர்களை மட்டுமே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக அரசு நியமிக்க முடியும் என்று நீதித்துறை கூறியுள்ளது. மூத்த பாரதிய ஜனதா தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் மோடி தலைமையிலான, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு முன் இது தொடர்பாக நீதித்துறை விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

நியமன சதவீதங்கள்:

நீதித்துறை பகிர்ந்துள்ள விவரங்களின்படி, 2018 முதல் டிசம்பர் 19, 2022 வரை, மொத்தம் 537 நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களில் 1.3 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் எனவும் 2.8 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர் எனவும் 11 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் எனவும் சிறுபான்மை சமூகங்களில் இருந்து 2.6 சதவீதம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.  

காரணம் என்ன: 

இதுவரை நீதித்துறையில் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளில் குறைவான அளவிலேயே பட்டியல் இன மக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com