திமுகவினரை எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி...!!

திமுகவினரை எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி...!!

அமெரிக்க நாடுகளைப் போல் தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினரை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள் என்று முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிக குற்றங்கள் நடைபெறும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல் தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினரை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, பொன்னேரி 17 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ஒரு குடும்ப பிரச்சினையில் தலையிட்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்வதையே திமுக கவுன்சிலர்கள் தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறையும் ஒரு கொலையில் முடிந்துள்ளதாக சாடியுள்ளார். 

மேலும், அதிக குற்றங்கள் நடைபெறும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல் தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினரை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.