பண்டைய கால விளையாட்டுகள் விளையாட ஆர்வத்துடன் கீழடிக்கு மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்து வருகின்றானர்.
கீழடி மியூசியத்தில் மெகா சைஸ் ஸ்கிரீனில் பண்யை கால விளையாட்டுகளை விளையாட பலரும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். கீழடியில் 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை தமிழக தொல்லியல் துறையினர் காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு பணிகள் மூலம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் ஆட்டகாய்கள், வட்டசில்லுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மை, விரல் இஞ்ச் பானை, மாடு, காளை பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனோடு பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன் காட்சிகளும் அருங்காட்சியக கட்டட தொகுதிகளில் உள்ள மெகா சைஸ் டிவிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அருங்காட்சியகத்தை காணவரும் மாணவ, மாணவியர்கள், இந்த விளையாட்டுகளை அங்கு வைக்கப்பட்டுள்ள மெகா சைஸ் இணையதள ஸ்கீரினில் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அருங்காட்சியகம் வரும் அனைவரும் இங்கு விளையாடி மகிழ்கின்றனர். டிவிகளில் பழைய கால திரைப்படங்களில் காட்டப்படும் ஆடுபுலி ஆட்டம், பகடை காய்களை கீழடி சென்று அனைவரும் விளையாடி மகிழ்கின்றனர். மாணவ, மாணவியர்கள் கூறுகையில் கம்யூட்டர், செல்போன் கேம்களில் விளையாடி மகிழ்ந்த நாங்கள் முதன் முதலாக பண்டைய கால விளையாட்டுகளை விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளனர்.